சின்னாளப்பட்டி, டிச.27- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிரா மம் தோட்டத்து குடியிருப பைச் சேர்ந்த மாரிமுத்து-கஸ்தூரி தம்பதியரின் மகன் முகேஷ் (10). இதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான வயிற்றுவலியால் ஏற்பட்டுள் ளது. இதை அடுத்து அரு கிலுள்ள பழனி மற்றும் திண் டுக்கல் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை செய் துள்ளனர். ஆனால் உடல் நிலை முன்னேற்றமடையாத தால், கண்டிப்பாக மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என சில மருத்துவர்கள் கூறி யுள்ளனர். இந்நிலையில், மதுரையி லுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிறு வனுக்கு ‘‘வில்சன் காப்பர்’’ என்னும் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று கூறி யுள்ளனர். இதனால் உயர் சிகிச் சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறு வனை அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரி சோதித்த மருத்துவர்கள், சென்னையிலுள்ள மருத்து வமனைகளுக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். எனவே தங்களது மகனை சொந்த ஊருக்கே அழைத்து வந்து விட்டனர். தீக்கதிர் செய்தி எதிரொலி இந்நிலையில், சிறுவன் குறித்த செய்தி டிசம்பர் 26 (திங்களன்று) தீக்கதிரில் வெளியானது. இதையடுத்து தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, சுகாதா ரத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் முயற்சியால், சென்னை ஸ்டான்லி மருத்து வமனையில் தற்போது சிறு வன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ம.ஹரிஹரன்