விருதுநகர், அக்.16- விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகு தியில் சுடுகாடு இல்லாததால் திறந்தவெளியில் பட்டிய லின மக்கள் உடல்களை எரிக்கும் அவலநிலை ஏற் பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூரைக்குண்டு கிராமம். இங்கு ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தி னர்களுக்கு இரு சுடுகாடு கள் உள்ளன. ஆனால், அருந்ததியர் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுடுகாடு கட்டிடத் தரப்பட வில்லை. இதனால், திறந்த வெளியில் உடல்களை எரி யூட்டும் அவலநிலை உள் ளது. மேலும் மழைக் காலங்க ளில் யாராவது இறந்து விட்டால், தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து, அதன் பிறகு உடல்களை எரியூட்டும் நிலை தொடர்கிறது. எனவே, உடனடியாக கூரைக்குண்டு பகுதியில் அருந்ததியர் மக்களுக்கான புதிய மயானம் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரி க்கை மனு அளித்தனர்.