districts

img

விமானக் கட்டணங்களை குறைத்து உள்நாட்டு விமான சேவையை அதிகரித்திடுக!

இராமநாதபுரம்,செப்.22-  இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி, ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் அதிகமா கப் பயன்படும் சென்னை-மதுரை, சென்னை- தூத்துக் குடி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகிறது. அதுவும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனமே பெரும் பான்மையான விமானங்க ளையும் இயக்கும் நிலை யும் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வணிகர்கள் மற்றும் பொது மக்கள் கூடுதலாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை பயன்படுத்துப வர்களாக இருக்கிறார்கள். ஆனால் போதுமான விமானங்கள் இயக்கப்ப டாததாலும், சிறிய ரக விமா னங்கள் இயக்கப்படாத தாலும், ஒரு குறிப்பிட்ட நிறு வனமே விமானங்களை இயக்குவதால் போட்டி யின்மையினாலும் மிக அதிகமாக விமான கட்டணம் உள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்த இய லாத அல்லது மிகவும் சிர மப்படும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். விமானத்தில் டிக்கெட் கிடைக்காமலும், விமான கட்டணம் அதிகரிப்பதி னாலும் பயணிகள் கடுமை யாக பாதிக்கப்படுகிறார் கள். இதுவரை இல்லாத அளவு விமானக் கட்டணம் கடுமையான விலை யேற்றம் தற்போது ஏற் பட்டுள்ளது.

எனவே ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு நான் இதுகுறித்து கோரிக்கை விடுத்திருந்த போது, விமான நிறுவனங்களே இது குறித்து முடிவெடுத்துக் கொள்கின்றனர் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பதிலளித்தது ஏற்புடையதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டி ருப்பதால் அவர்கள் நிர்ண யிப்பதே விமான கட்டணம் என்ற நிலை உருவாகி வருவது மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்னை - மதுரை, சென்னை- தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் கூடுதலாகவும், பெரிய ரக விமானங்களை இயக்க வும், கூடுதலாக விமான நிறு வனங்களும் விமானங்களை இயக்க அரசு விமான நிறு வனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர். எனவே மக்களின் கோரிக் கையை ஏற்று கூடுதலான விமான சேவையை தொடங்க, பெரிய ரக விமா னங்களை இயக்க விமான நிறுவனங்களை அறிவுறுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.