districts

img

தியாகி பி.சீனிவாசராவ் நினைவுதினத்தில் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி களப்பணி

சு.வெங்கடேசன் எம்.பி., - மேயர் பங்கேற்பு மதுரை, அக்.1-  சாதிய வர்க்க ஒடுக்குமுறை களுக்கு எதிராகப் போராடிய விவசாயி கள் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் பி.  சீனிவாசராவ் அவர்களின் 61 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 30 அன்று  தமிழ்நாடு தீண்  டாமை  ஒழிப்பு முன்னணியின் மதுரை  மாநகர் மாவட்டக்குழு சார்பில்   மேல வாசல் பகுதியில் களப்பணி மற்றும் மரக்  கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்த இயக்கத்திற்கு முன்னணி யின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலா ளர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி தூய்மைப் பணியாளர் சங்கச் செயலாளர்  கே.குரு சாமி வரவேற்றுப் பேசினார். மதுரை மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் மரங்கன்றுகளை நட்டுவைத்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தூய்மைப் பணியினை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மத்திய - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஜா. நரசிம்மன்,  புறநகர் மாவட்ட பொருளாளர்  மகா லிங்கம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம். மோகன்காந்தி, பி.கோபிநாத், ஜெ. பார்த்தசாரதி, பி.ஏ. மாரிக்கனி, மாவட்  டக்குழு உறுப்பினர்கள் எம். மோகன், நா. சுரேஷ்குமார், 76 ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் ஆர். கார்த்திக், ஆதித்தமிழர் பேரவை கலை இலக்கிய மாநிலச் செயலாளர் இரா.தமிழ்ச்செல் வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு களப்பணியாற்றினர்.

இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்  பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், மதுரை மேலவாசல் பகுதிக்கு தனிக்கவ னம் செலுத்த வேண்டும் என்று நான்  ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது அமைச்சரிடமும் அதற்கான தனி திட்ட மிடல் வேண்டும் என்று கூறியுள்ளேன்.  மதுரையின் சுகாதாரம் சார்ந்து பாதா ளச் சாக்கடை வசதி, கிருதுமால் நதி   வேலைகளில் தீர்க்க முடியாத பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றையெல் லாம் சரி செய்வதற்கான ஒரு முழு  திட்டம் உணர்வுபூர்வமாக ஊழலற்ற திட்டம் வேண்டும். அதற்கு  அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்  டும். சமத்துவம்  அமைய தோழர் பி. சீனிவாசராவ் களத்தில் நின்று போரா டியது போல தீண்டாமைக்கொடுமை இல்லாத, ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு  சமூகத்தை உருவாக்க நம்முடைய மனங்களில் உள்ள குப்பைகளை அகற்ற  இதுபோன்ற  பணிகளைச் செய்யக் கூடிய இயக்கங்கள்தான் இன்றைக்கு ஒன்றிணைந்துள்ளோம். நிச்சயமாக இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்  வோம். இதுபோன்ற பணிகளை தோழர்  கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து மதுரையில் ஏழாவது நாள் மாற்றுத்திற னாளிகள் முகாம் நடைபெற்று வரு கிறது.

மதுரை மாவட்டத்தில் 50 சத வீத மாற்றத்திறனாளிகள் கூட பதிவு செய்யாமல் இருக்கின்றார்கள். தற்  போது அதிக அளவில் மாற்றுத்திற னாளிகள் இந்த முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு  சமூகப் புரட்சியை போல. உதாரணத் திற்கு மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டி ஒன்றியத்தில் பட்டியலில் இருக்  கக்கூடியது 531 பேர். ஆனால் முகா முக்கு வந்தவர்கள் 1500-க்கும் மேற்  பட்டவர்கள். பட்டியலில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமானோர் முகாமுக்கு வந்துள்ளார்கள். அவர்  களுக்கு பலன்களை கொடுக்கக்கூடிய முகாமாக அந்த முகாம் அமைந்துள் ளது.  யாதவா கல்லூரியிலும் அடுத்த  வாரம் தியாகராஜர் கல்லூரியில்  முகாம்  கள் நடைபெற உள்ளது இப்பகுதி யில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுவட்டா ரத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திற னாளிகள் இதில் கலந்துகொண்டு பய னடைய வேண்டும். இவை யாவும் தற்  போது நடைபெற்று வரும் களப்பணி யை போல ஒரு கூட்டு இயக்கமாக நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தோழர்கள் ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை ஒன்றிணைத்து இந்த முகாமிற்கு கொண்டு வந்து  சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

;