மதுரை,டிச.17- குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்திட வேண்டும், ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை அவ னியாபுரம் பகுதிக் குழு சார்பில் அவனியா புரம் மந்தையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பகுதிக் குழுச் செயலாளர் வி.கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் க.தமிழரசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் விளக்கி பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா நிறைவுரையாற்றினார். இதில் பகுதிக் குழு நிர்வாகிகள் நாக வேல் முருகன், சோலைகனி, சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.