districts

img

பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள சட்டம் கொண்டு வருக: சிபிஎம்

சென்னை, டிச. 6 - பகுத்தறிவு பிரச்சாரம் மேற் கொள்ள தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள் ளார். டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் திங்களன்று (டிச.6) நாடு முழுவதும் அனுசரிக்கப் பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னை நந்தனம் எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 

அண்ணல் அம்பேத்கர் உரு வாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு  சீர்குலைத்து வருகிறது. அர சியலமைப்புச் சட்டத்தின் அம்சங் களை பாதுகாக்க உறுதியேற்கும் நாளாக இந்நாளை மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்திய சமூகத்தில் நீடித்து நிலைத்து நிற்கிற சாதியக் கொடுமை களுக்கு முடிவு கட்டும் போராட்ட த்தில், அனைத்து சாதி உழைப்பாளி களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த போராட்டத்தில், அனைத்து சமூக மக்களையும் திரட்டும் பணியை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும். தமிழக அரசு சமூக நீதிக்குழு ஒன்றை அமைத்திருப்பது வர வேற்கத்தக்கது. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள்; ஒடுக்கு முறைகள்; மூடப் பழக்க வழக்கங் களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அரசு வலு சேர்க்க வேண்டும். அதற்கு ஏதுவாக, பிற மாநிலங் களில் உள்ளதுபோல், பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும். பகுத்த றிவு பிரச்சாரத்தை சட்ட ரீதியாக நடத்த உரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த அவர், “ஒன்றிய  பாஜக அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படையான நிலை. மம்தா  பானர்ஜி சொல்வது இருக்கட்டும்,  பல பேர் பாஜக-வின் பின்புலத்தி லிருந்து செயல்படும் நிலையும் உருவாகும். எதிர்க்கட்சிகளின் ஒற்று மையை சீர்குலைக்கும் எந்த நட வடிக்கையையும் மார்க்சிஸ்ட் கட்சி  அனுமதிக்காது. எதிர்க் கட்சி களிடையே பிரம்மாண்டமான ஒற்றுமை ஏற்பட்டு வருகிறது. அந்த  அடிப்படையில்தான் விவசாயிகள் முன் ஒன்றிய அரசு மண்டியிட்டதை பார்க்க வேண்டும்” என்றார். “நாகாலாந்து போன்ற வடகிழக்கு எல்லை மாநிலங்களில் ராணுவ ஆட்சியைத்தான் ஆட்சி யாளர்கள் நடத்துகிறார்கள். ராணு வச் சட்டங்களை அமல்படுத்து கிறார்கள். அதன் ஒருபகுதியாகத் தான் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். ராணுவ கட்டுப்பாடு களை திரும்பப்பெற வேண்டும்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சி யின் மாநிலக்குழுஉறுப்பினர் ஏ.பாக்கியம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.