இராமநாதபுரம், மார்ச் 28- இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அல்ஹாதி மழ லையர் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி 21 ஆம் ஆண்டு விழா தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்க லைக்கழக ஒருங்கிணைப்பாளர் தியாகராஜா, கமுதி வட்டாட்சியர் பபிதா,காவல்துறை ஆய்வாளர் அபு தல்ஹா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கண்ணதாசன் ஆகியோர் பேசினர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. தனியார் பள்ளி சங்கத்தின் சார்பில் பள்ளியின் தாளாளர் காஜா நஜ்முதீனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் நன்றி கூறினார்.