மதுரை/தேனி, ஏப்.5- திமுக தலைமையிலான ‘இந் தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி பரப்புரை மேற்கொண்டார்.
அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலும், மதுரை முனிச் சாலை பகுதியிலும் நடைபெற்ற கூட் டங்களில் கி.வீரமணி பேசியதாவது:
பிரதமர் மோடி மாநிலங்களே இருக்கக்கூடாது. கூட்டாட்சி தத்து வம் இருக்கக்கூடாது, ஒற்றை ஆட்சி யாக இருக்க வேண்டும். காவி ஆட்சி யாக இருக்க வேண்டும் என நினைக் கின்றார். அறிவிக்கப்படாத நெருக் கடி நிலை ஆட்சியாக மோடி ஆட்சி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு களைக் கூட மதிக்காத ஆட்சி. பிரத மர் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பா கவே 400 இடங்களில் வெற்றி பெறு வோம் என்று தேர்தல் கணக்கு சொல் கிறார். அந்த அளவிற்கு தேர்தல் ஆணையத்தை, சிபிஐ, ஐடி, அம லாக்கத்துறையை மோடி நம்பு கிறார்.
எனவே, இந்தியாவில் நாடாளு மன்றத்திற்கு தேர்தல் தொடர்ந்து நடக்க வேண்டுமா, இதுவே கடைசி தேர்தலாக இருக்க வேண்டுமா? என்ற 2 கேள்விகள் மக்கள் முன் னால் உள்ளன. வரும் காலத்தில், ஜன நாயகத்திற்கு, மனித உரிமைக்கு பாதுகாப்பு இருக்குமா? என்பதை யும் தீர்மானிப்பதாக இந்த தேர்தல் உள்ளது. ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. மீண்டும் மோடி வருவாரானால் மீண்டும் ஜனநாயகம் பிழைக்காது. எனவே, மக்கள் கவனச் சிதறல்கள் இல்லாமல் 100-க்கு 100 சதவிகிதம் மக்கள் வாக்களிக்க வேண்டிய தேர் தல். ‘இந்தியா’ கூட்டணி பதவிக்கான கூட்டணியல்ல. மக்களின் உதவிக் கான கொள்கை கூட்டணி. அந்தக் கூட்டணி வெற்றிபெற வேண்டும்.
தற்போதைய சூழலில் நாடு முழு வதும் பாஜகவுக்கு எதிரான மன நிலை உள்ளது. எனவே, சிரசாசனம் போட்டாலும் பாஜக - மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
மோடி உருவாக்கிய 3 தொழிற்சாலைகள்
மோடி உருவாக்கிய மூன்று தொழிற்சாலைகள். ஒன்று பொய் சொல்வதற்கான தொழிற்சாலை. இரண்டாவது தொழிற்சாலை தன்னுடன் ஒத்து போகாதவர்களை, தன்னுடன் வந்து இணையாதவர்கள் மீது வழக்கு போடும் தொழிற்சாலை. இதற்கு பெயர் தான் வாஷிங் மிஷின் தொழிற்சாலை. மூன்றாவது தொழிற்சாலை திரிசூலம் தொழிற் சாலை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- இது மூன்றும் தான் மோடி அமைத்த தொழிற்சாலை’’ என்று பேசினார்.
பிரிபெய்டு ஊழல் போஸ்ட் பெய்டு ஊழல்
தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழலையே பிரிபெய்டு ஊழல், போஸ்ட் பெய்டு ஊழல் என்று பாஜக மாற்றியுள்ளது. உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் 93-ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்த நிலையில் தான், ஊழலை ஒழிப் பேன் என்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் பத்திரம் ஊழலை மறைப்ப தற்குத்தான் கச்சத்தீவு பிரச்சனை யை எழுப்புகின்றனர்.