தருமபுரி, டிச.16- தமிழகத்தில் கடன் தொல்லையினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு தனியார் கடன் நிவாரண சட்டத்தை அமல் படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மாநாடு வியாழனன்று துவங்கியது. இம்மநாட்டையொட்டி நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், மோடி அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனி யார்மயமாக்க முயற்சிக்கிறது. முன்னர், தனி யார்மயமாக இருந்த வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. தற்போது மீண்டும் மோடி அரசு வங்கிகளை தனியார்மயமாக்க முயற்சிக் கிறது. இதனை எதிர்த்து 15 லட்சம் வங்கி ஊழி யர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இதேபோல், இந்தியாவில், தமிழகத்தில் அதிகமான இளைஞர்களுக்கு வேலை அளிப்பது சிறு குறு தொழில்கள் தான். ஏற்றுமதி யில் 30 சதவீதப் பொருட்கள் சிறு குறு தொழில் மூலம் உற்பத்தியாகின்றன. இந்த சிறு குறு தொழில்களை மோடி அரசு தரைமட்டமாக்க நினைக்கிறது. ஆலைக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை 300 மடங்கு உயர்ந்துள் ளது. மோடி அரசு கார்ப்பரேட் பெரும் முதலா ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஏழரை லட்சம்கோடி ரூபாய் தள்ளுபடி செய்து இருக்கி றது. ஆனால், சிறு குறு தொழில்களுக்கு தள்ளு படிஇல்லை. எனவே, மோடி அரசு இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் சிறுகுறு தொழில் நிறுவனங்க ளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கடன் நிவாரண சட்டம்
தமிழகத்தில் கடன் தொல்லையினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தினம், தினம் அதிகரித்து வரு கிறது. பணமதிப்பு நீக்கம், தொழில் முடக்கம், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு போன்ற காரணங்க ளால் சாதாரண குடும்பங்கள் கடனில் தத்த ளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தனியார் கடன் நிவாரண சட்டம் கேரளத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிற தோ, அதேபோல் தமிழகத்திலும் செயல்படுத்தப் வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் கடன் பெற்ற வர், கடன் கொடுத்தவர் என இரண்டு பேரையும் அழைத்துப் பேசி தீர்வு காண முடியும். இதே போல், கந்துவட்டி கொடுமை தற்கொலைக்கு காரணமாகிறது. எனவே. கந்துவட்டி கொடுமை க்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர சிறைகளில் தமிழக இளைஞர்கள்
தருமபுரி மாவட்டம், சித்தேரி பழங்குடி இளைஞர்கள் செம்மரக்கட்டை வெட்டுவதா கக் கூறி ஆந்திரா போலீசாரால் கண்மூடித்தன மாக தாக்கப்படுகின்றனர். மேலும், இந்த மலை கிராமங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட இளைர்கள் ஆந்திர சிறையில் அடைக் கப்பட்டு உள்ளனர்.சமீபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணம் சித்தேரி மலை கிராமத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததே. இதனை பயன் படுத்தி செம்மரம் கடத்தும் பெரிய, பெரிய காண்ட்ராக்டர்கள் பழங்குடியின இளைஞர் களை கூலி வேலைக்காக அழைத்து செல்கின் றனர். ஆகவே, ஆந்திர அரசு செம்மரக் கடத்த லில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், செம்மரம் கடத்தும் காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல், சாதாரண அப்பாவி தொழிலாளர்களை சிறை யில் அடைக்கும் நிலைமை உள்ளது. எனவே, தமிழக அரசு ஆந்திர சிறையில் உள்ள தொழி லாளர்களை மீட்க வேண்டும். இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த பேட்டியின் போது மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் ஏ.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.