districts

img

மசூதி போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும்

கோழிக்கோடு, டிச.2- வக்ஃப் நியமனங் களை பிஎஸ்சிக்கு மாற்றுவதற்கு எதி ரான மசூதி போராட் டத்திற்கு சமஸ்தா கேரள ஜம் இய்யதுல் உலமா தலைவர் ஜெஃப்ரி முத்துக்கோயா தங்கல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோழிக்கோடு டவுன்ஹாலில் வக்ஃப் முத்தவல்லி சங்கத்தை துவக்கி வைத்த ஜெஃப்ரி முத்துக்கோயா தங்கல் மேலும் கூறியதாவது: வழிபாட்டுத் தலங்களை போராட்டக் களங்கள் ஆக்குவதையும் விவாத மையங்களாக மாற்றுவதையும் சமஸ்தா ஆதரிக்கவில்லை என்றார். வக்பு நியமனங்களை பிஎஸ்சிக்கு மாற்று வதற்கும் சமஸ்தா எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. எவ்வாறாயினும், இப்பிரச்சனை தொடர் பாக கலந்துரையாடுவதற்கு தயார் என முத லமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரி டம் பேசுவோம். நமது கவலைகள் அவரிடம் தெரிவிக்கப்படும். முடிவு சாதகமாக இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும். தொழுகை இடங்களில் போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற் பபட்டால் அது சமஸ்தாவின் பெயரில் இருக் கக் கூடாது. சமஸ்தா அதை விரும்பவில்லை. எனவே மசூதியில் போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

;