districts

img

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி சிவகாசியில் மாபெரும் போராட்டம்

சிவகாசி, டிச.17- ஒனறிய பாஜக அரசானது, சுற்றுச் சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சரவெடி தயாரிப்பதற்கான தடையை நீக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் இன்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய் வேண்டும். உடனடியாக 8 லட்சம் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு-பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட் டுத்துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் ஆயிரக் கணக்கான பெண் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.மகாலெட்சுமி துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் பேசினார். மாவட்ட பொருளாளர் எம்.சி.பாண்டியன் விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா உரையாற்றினார். வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி யிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது.  மேலும் இதில், சிபிஎம் நகர ஒன்றிய செயலாளர்கள் ஆர்.சுரேஷ்குமார், பி.பாலசுப்பிரமணியன், எம்.முனிய சாமி, எஸ்.சரோஜா, பட்டாசு சங்க மாவட்ட நிர்வாகிகள்  மனோஜ்குமார், முனியாண்டி, பிச்சைக்கனி, ஜோதி மணி, பாண்டியராஜ், ஜெபஜோதி ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;