districts

img

முதல்வரின் காலை உணவு திட்டத்தை பள்ளி சத்துணவு மையங்களில் இணைத்திடுக!

தேனி, ஏப்.3- முதல்வரின் காலை உணவு திட்டத்தை பள்ளி சத்துணவு மையங்களில் இணைக்க கோரி  தேனி மாவட்டத்தில் 6 இடங்க ளில் சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்  டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் .குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் .பணிக்கொடை ரூ 5  லட்சம் வழங்க வேண்டும் .காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு முதல்வர் கவனத்திற்கு செல்லும் வகையில்  பெருந் திரள் முறையீடு நடைபெற்றது . தேனி மாவட்டத்தில் தேனி ,கம்பம் , சின்னமனூர் ,பாளை யம், பெரியகுளம் ,போடி ஆகிய  இடங்களில் ஒன்றிய ,நகராட்சி அலுவலகங்கள் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் மாநில  துணைத் தலைவர் பேயத் தேவன், மாவட்ட தலைவர் பி. ரவி, மாவட்டச் செயலாளர் பவானி, மாவட்ட பொருளாளர் லட்சமி ,மாவட்ட நிர்வாகிகள் கருப்பழகு ,கலைச்செல்வி ,முருகன் வெங்கட்ராமன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர் . மயிலாடும்பாறையில் நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கும ரன் தலைமை தாங்கினார். ஜெயக்குமார், மாவட்டத் தலை வர் ரவி ஆகியோர் பேசினர்.