அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு ரூ.27 கோடி ஒதுக்க வலியுறுத்தல்
இக்கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் என்.பழனிச்சாமி பேசியதாவது:
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மூன்று வருட காலமாக இயங்காமல் இருந்தது. 2022-23ஆம் ஆண்டு ஆலை யில் அரவை துவங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உயர்மட்ட கமிட்டியும் அமைக்கப்பட்டது.அந்த உயர்மட்ட கமிட்டி ஆலையை பார்வையிட்டு ரூ. 27 கோடி தேவைப்படுகிறது என்று பரிந்துரை செய்து, அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. அறிக்கை கொடுத்து மூன்று மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. ஆலையில் 1800 ஏக்கர் பதிவு செய்த கரும்பு உள்ளது. 2000 ஏக்கர் பதிவு செய்யப்படாத கரும்பு உள்ளது. வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் அங்கு மூன்று லட்சம் கரும்பு உள்ளது .இந்த வருடம் ஆலையை துவக்கினால் தான் நம்பிக்கை வந்து ஆலைக்கு உட்பட்ட விவசாயிகள் கரும்பு பயிரிடுவார்கள் .கரும்பு பதிவ தற்கு ஆலையில் அலுவலர்களை நியமித்து கரும்பு பயிட நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் மராமத்து வேலைகளை உடனடியாக செய்ய வேண்டும். வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும் .ஆகையால் தேவை யான நிதியை ஒதுக்கி ஆலையை சீக்கிரமாக இயக்குவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை, மார்ச் 8- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங் களை சேர்ந்த விவசாயிகள், விவ சாய சங்க பிரதிநிதிகளுடன் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில், 2023-2024-ஆம் ஆண் டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் மார்ச் 7 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி வரவேற்றார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் ஆ.தமிழரசிரவிக்குமார், சிவ கங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம். துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் மற்றும் புதுக் கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை இணை இயக்கு நர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள், விவசாயிகள் மற்றும் விவ சாய சங்கப்பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகை யில், இக்கூட்டத்தின் வாயிலாக விவ சாயிகளிடமிருந்து நேரடியாக கருத்துக்கள் பெறப்படுவது மட்டு மன்றி, முன்னதாக பத்திரிகைகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் இதுவரை 2,253 விவ சாயிகளிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை மதிப்பூட்டுப் பொருட்களாகவும், தொழில் முனை வோர்களாகவும் உருவெடுக்கும் வகையிலும், மேலும். வேளாண் விற் பனை வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதிகளும் வழங்கப்பட்டு மதிப்பூட்டு விளைப் பொருட்களை விற்பனை செய்கின்ற வகையிலும், இதுபோன்று விவ சாயிகளுக்கு பயனுள்ள வகை யிலும், வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் சார்பில் பல் வேறு திட்டங்கள் தமிழ்நாடு முத லமைச்சரால் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் விவசாய புரட்சி ஏற் படுத்துகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகை யில், இக்கூட்டத்தின் மூலம் விவ சாய சங்கப் பிரதிநிதிகளை நேரடி யாக சந்தித்து, வேளாண் துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் விவசாயத் தொழிலில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கருத்து கேட்பு மேற்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை களை பெற்று, அதற்கான முறையான தீர்வுகளை காண்பதற்கு இவை அடிப்படையாக அமைகிறது. விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்படுகின்ற இக் கருத்துக் கேட்பு கூட்டத்தில், தங்க ளின் ஆக்கப்பூர்வமான கருத்துக் களை இதில் பதிவு செய்து, அக் கருத்துக்கள் அனைத்தும் தமிழகத்தி லுள்ள அனைத்து விவசாயிகளுக் கும் பயனுள்ள வகையில் அடிப்ப டையாக அமைவதற்கென, தங்களது பங்களிப்பினை சிறப்பாக அளித்திட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலை வர் வீரபாண்டி பேசுகையில், காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த கேட்டுக் கொண்டார். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுச் சாமி பேசுகையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் வேலை செய்பவர்களுக்கு முழு ஊதியம் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் பேசுகையில், மானாமதுரை சுப்பன் கால்வாய் திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்பெறுகிற திட்டமாக செயல் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.