districts

img

விருதுநகரில் புதுமைப் பெண் திட்டம் துவக்கம்

விருதுநகர், செப்.5- விருதுநகரில் 637 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையுடன், வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக் கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப் பெண்” பெட்டகப் பை மற்றும் வங்கிப் பற்று அட்டைகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். விருதுநகரில் தனியார் கல்லூரியில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜி.அசோகன், ஏ.ஆர்.ஆர்.ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா  இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு, அமைச்சர்கள் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகி யோர் 637 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை யுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் வங்கி பற்று அட்டை ஆகிய வற்றை வழங்கினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலு வலர் இந்திரா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;