districts

img

ஆலமரத்துப்பட்டி சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கட்டிடம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், பொது சுகாதாரம்-நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் இ,பெ.செந்தில்குமார் ,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜ கணேஷ், சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தலைவர் ஆறுமுகம், அம்பாத்துறை ஊராட்சித் தலைவர் சேகர், பிள்ளையார் நத்தம் ஊராட்சி தலைவர் உலகநாதன் ,பிடிஓ.க்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் ஆகியோர் பங்கேற்றனர்.