இராமநாதபுரம், மார்ச்.4- இராமநாதபுரம் நகராட்சி நகர்மன்றத் தலைவராக திமுக ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவராக திமுக பிரவீன் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இரா மேஸ்வரம் நகர மன்றத் தலைவராக திமுக நாசர் கான், துணைத் தலைவராக திமுக தட்சிணா மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பரமக்குடியில் நகர்மன்றத் தலைவராக திமுக சேது கருணாநிதி, துணைத் தலைவ ராக மதிமுக கே.ஏ.எம்.குணசேகரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். கீழக்கரை நகர் மன்றத் தலைவராக திமுக சஹானாஸ் ஆபிதா, துணைத்தலைவராக திமுக அமீது சுல்தான் தேர்வு செய்யப்பட்டனர்.