districts

img

பூர்வக் குடிகளின் மரபணுவில் கை வைக்கும் கார்ப்பரேட்டுகள் - ரமணன்

அமெரிக்காவில் அறிவியல் ஆய்வுகளில் பூர்வ குடிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்  கள் என்பதை கிரிஸ்டல் சோசி(Krystal Tsosie) எனும் ஆய்வாளர் விளக்கியுள்ளார். பூர்வ குடிகள் வாழும் நவாஜோ நேஷனில் பிறந்தவர் சோசி. சிறு வயதிலிருந்தே அறிவியலில் நாட்டம்  கொண்டார். சமூக பொருளாதாரத்தில் அடித்தட்டு  பிரிவினராக இருந்தவர்கள் மத்தியில் வாழ்ந்ததால்  தன் மக்கள் மற்றும் சமுதாயத்தின் பிரச்சனை களை முன்னெடுத்து செல்வதின் முக்கியத்து வத்தை உணர்ந்தார். மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். இன்று அரிசோனா பல்க லைக்கழகத்தில் மரபணுவியல் -உயிரி அறவியல் (geneticist-bioethicist) நிபுணராக உள்ளார். 1993இல் எலிகளாலும் தூசியாலும் ஏற்படும் HPS எனப்படும் நுரையீரல் நோய் அமெரிக்காவை தாக்கியது. அதுவரை இந்த நோய் குறித்து மேற்  கத்திய விஞ்ஞானம் அறிந்திராவிட்டாலும் நவாஜோ  பாரம்பரியத்தில் அது குறித்த ஞானம் இருந்தது. அது ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது. இதை அறிந்த சோசி மருத்துவராகும் எண்ணத்தை கைவிட்டு நோய்கள் குறித்த ஆய்வா ளரானார். யுரேனியம் சுரங்கத்தால் நவாஜோ பகுதி யில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல்  பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சோசி புற்று நோய்  தொடர்பான ஆய்வுகளில் இறங்கினார். இங்கு  அவர் லாப நோக்கில் அமைந்த எதார்த்தங்களை யும் ‘ஆழப் பதிந்த அமைப்பு ரீதியான’ இனவாதத்  தையும் எதிர்கொண்டார். பூர்வ குடிகளுக்கு பிரதி நிதித்துவம் இல்லாதிருந்தது; சிறந்த மருத்துவ வசதிகளை பூர்வ குடிகள் பெற முடியாத வகை யில் பாகுபாடுகள் இருந்தன.  மரபியல் ஆய்வு பிக் டாட்டா எனப்படும் பெரும் தரவுகளை பெருமளவு சார்ந்திருப்பதையும் அவை  எவ்வாறு பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதை யும் கண்ட அவர் பூர்வ குடியை சார்ந்த மரபணுவி யல் நிபுணர்கள் பெருமளவு தேவை என்பதை உணர்ந்தார். உலகளவில் பூர்வ குடிகளின் மரபணு வியல் தரவுகள் பயன்பாட்டில் அவர்களின் உரிமை களும் இறையாண்மையும் மீறப்படுகிறது. எடுத்துக்  காட்டாக ஹவாசுப்பாய் இன மக்கள் தங்கள் சமு தாயத்தில் நிலவும் சர்க்கரை நோய் குறித்து மேலும்  அறிந்து கொள்வதற்காக 1990முதல் தங்கள் டிஎன்ஏ  மாதிரிகளை அரிசோனா மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு அளித்தனர். ஆனால் ஆய்வா ளர்கள் அந்த இன மக்களுக்கு தெரிவிக்காமலும் அவர்களின் ஒப்புதல் இல்லாமலும் டிஎன்ஏ மாதிரி களை மனநோய், குடிப்பழக்கம் போன்ற ஆய்வு களுக்கு பயன்படுத்தினர். 2010இல் அரிசோனா நிர்வாகம் அந்த இன மக்களுக்கு 700000/ டாலர்  கள் ஈட்டுத்தொகை, மாதிரிகளை திரும்ப கொடுப்  பது உள்ளிட்ட பிற நஷ்ட ஈட்டையும் கொடுத்து பிரச்சினையை முடித்தனர். பூர்வ குடிகளின் டிஎன்ஏ மாதிரிகளை மேற்கத்திய அறிவியல் துறை  தவறாக பயன்படுத்தும் நீண்ட வரலாற்றில் இது  ஒரு பிரபல உதாரணம் மட்டுமே. இந்த நிகழ்வுப்  போக்குகளினால் நவஜோ தேசம் தனது எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் மரபணு ஆய்வுகள் நடத்தப்படு வதற்கு தடை விதித்தது. இதன் கூடவே ஜீனோ மிக்ஸ் எனப்படும் துறையின் வளர்ச்சியும் சேர்ந்து பூர்வ குடிகளின் தரவுகளை பாதுகாப்பது, அவற்றை மேலாண்மை செய்வது, ஆய்வு நடத்து வது மற்றும் அவற்றின் பலன்களை அவர்களே அடைவது ஆகியவற்றில் பூர்வ குடியை சேர்ந்த அறிவியலாளர்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு சோசியை இட்டு சென்றது. அவரைப் போன்ற பூர்வகுடி மரபணு விஞ்ஞானிகளான கியோலு ஃபாக்ஸ் மற்றும் ஜோசஃப் யோஷிரா ஆகியோருடன் இணைந்து பூர்வ குடி உயிரி தரவுக் கூட்டமைப்பு என்பதை தொடங்கினார். இலாப நோக்கற்ற ஆய்வு நிறு வனமான இதில் அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனர். வட அமெ ரிக்காவின் முதல் பூர்வகுடி மரபணு தரவுகள் அடங்  கிய களஞ்சியம் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பலவித ஆய்வுகளை ஆதரிக்கும். மண் வள ஆய்வு, நுண் உயிர்த்தொகுதி ஆய்வு,  கோவிட் தொற்றிற்கான கண்காணிப்பு திட்டம் ஆகி யவை இதில் அடங்கும். அமெரிக்காவில் பூர்வ குடி களின் டிஎன்ஏ மாதிரிகளுக்கு இது போன்ற கட்டுப்  பாடுகள் வந்துவிட்டபடியால் ஆய்வாளர்களும் கார்ப்பரேஷன்களும் லத்தீன் அமெரிக்க பூர்வ குடி களின் மாதிரிகளைப் பெற முயற்சிக்கின்றனவாம்.

;