நாகர்கோவில், மே 16- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கன்னியாகுமரி மாவட்ட பேரவை கூட்டம் மருதங்கோடு ஊராட்சி தலைவரும் சங்கத்தின் மாவட்ட துணை தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் ராஜதாஸ், குமரேசன், மிக்கேல் நாயகி, விஜயகுமார், சிவ மோகன், ஜெயா உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஒன்றிய, வட்டார, ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி உள்ளிட்டோர் பேசினர். ஊரக வேலையை உடனே துவங்க வேண்டும். நகரப்புற வேலை விரிவாக்கப்பட வேண்டும். மற்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்னால் ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் ஜூன் மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.