districts

img

பாளையத்தில் நான் முதல்வன் வழிகாட்டும் நிகழ்ச்சி

தேனி, ஜூலை 4- ‘நான் முதல்வன் உயர்வுக்குப்படி ‘என்ற வழி காட்டுதல் நிகழ்ச்சி தேனி மாவட்டம், உத்தமபாளை யம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி யில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தலைமை வகித்தார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் எஸ்.எம்.முகமதுஅப்துல்காசிம், கல்லூரியின் முதல்வர் முகமது மீரான், ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலா ளர் தர்வேஸ் மூகைதீன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜூன் 27 அன்று  பெரியகுளம் கோட்டத்திற்குட்பட்ட ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 384 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 300 மாணவ மாணவி யர்களுக்கு வழிகாட்டப்படுகிறது. ப்ளஸ்-2 முடித்த அனைவரும் நூறு சதவீதம் உயர்கல்வியில் சேரு வதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. எனவே, மாணவ மாணவியர்கள் இந்த நல்ல வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.