districts

img

வளர்ச்சிப்பணியைத் தடுக்க முயலும் பாஜகவினருக்கு துணைபோகும் காவல்துறை, மின்துறை அதிகாரிகள் பனச்சமூடில் நடந்தது என்ன?

மலையோர நெடுஞ்சாலை (எஸ்எச் 59)

கேரளத்தில் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளான கள்ளிக்காடு, ஒட்டசேகரமங்கலம் ஆம்பூரி, வெள்ளரடா, குன்னத்துக்கல், பாறசாலை கிராம பஞ்சாயத்துகள் வழியாக ரூ.103 கோடி மதிப்பீட்டில் மலையோர பாதை அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் மொத்த நீளம் 27.45 கி.மீ. தற்போதுள்ள சாலையின் அகலத்தை 12 மீட்டராக அதிகரித்து, 9 மீட்டர் அகலத்தில் நவீன முறையில் வலுவான சாலை அமைத்தல், முக்கிய சந்திப்புகளில் சாக்கடை கால்வாய்களை மேம்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல், மதகுகள் அமைத்தல், தேவையான இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைத்தல், நடை பாலங்கள் அமைத்தல், பயன்பாட்டு குழாய்கள், பேருந்து நிறுத்தங்கள், காத்திருப்புப் பகுதிகள் அமைக்கும் பணியும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வருகின்றன. பாறசாலை முதல் குடப்பனமூடு வரை முதல் அடுக்கு தார் போடும் பணி நடைபெற்று வருகிறது.

95சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் நிறைவடைந்தால், புதிய வளர்ச்சிப் பாதைகள் திறக்கப்படுவதுடன், சுற்றுலா, வர்த்தகம், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும் என்கிறார் பாறசாலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஹரீந்திரன். இந்த வளர்ச்சிப்பணிகளுக்கு கேரளத்தில் தடை ஏற்படுத்த முடியாத சங்பரிவார் சக்திகள் தமிழ்நாட்டு எல்லையை இலக்காக்கி உள்ளனர். இதன்மூலம் குமரி மாவட்ட எல்லையில் உள்ள மலைக்கிராமங்களும் வளர்ச்சியடைவதை தடுக்கும் நடவடிக்கைக்கு இங்குள்ள அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். தமிழக அரசு இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சிப்பணிகளில் கேரள அரசுடன் கைகோர்த்து முன்னேற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நாகர்கோவில், டிச.20-        கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் மாங்கோடு ஊராட்சி தலைவர் ராஜன் மீது பாஜக வினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தி யுள்ளனர். கேரள எல்லையை ஒட்டி நடந்த திட்டமிட்ட வன்முறைக்கு அரு மனை காவல்துறையினரும் மின்துறை அதிகாரிகளும் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு நடந்தது குறித்த விவரம் வருமாறு:  கேரளத்தில் ரூ.103 கோடி மதிப் பீட்டில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையோர பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 27.45 கி.மீ. நீளத்தில் தற் போதுள்ள சாலையின் அகலத்தை 12  மீட்டராக அதிகரித்து பாறசாலை வரை  இந்த மலையோர பாதை செல்கிறது.

இந்த சாலையின் மறுபக்கத்தை தமிழ கத்துடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி  பனச்சமூடு. இங்கு சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றினால் மட்டுமே விரிவாக்கப்பணியை முழு மையாகத் தொடர முடியும். இதற்கு  கேரள பொதுப்பணித்துறை அதிகாரி கள் மாங்கோடு ஊராட்சி தலைவர்  டி.எஸ்.ராஜனின் உதவியை நாடியுள்ள னர். அவரது வேண்டுகோளுக்கிணங்க, மின்துறை அதிகாரிகள் சனியன்று (டிச. 18) மின்கம்பங்களை மாற்றி நடும் வேலையை தொடங்கினர். பாஜக பிரமுகரான அனி என்கிற சந்தோஷ் குமார் தனது கடை அருகில்  சாக்கடை கால்வாய்க்குள் நடப்பட்டி ருந்த மின்கம்பத்தை மாற்றிநட எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். அனியுடன் சேர்ந்து சுனில், லிபின், விஜிகுமார் ஆகியோர் ஊராட்சித் தலைவர் ராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பணியை  தொடர முடியாதது குறித்து உடனடி யாக அருமனை காவல் ஆய்வாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், சம்பவ இடத்துக்கு  காவல்துறையினர் வர தாமதமானதைப் பயன்டுத்தி ஊராட்சிமன்ற தலைவர் ராஜனை தாக்கி யதுடன் தலையில் இரும்பு கம்பியால் அடித்து காயப்படுத்தினர்.

சுருண்டு கீழே விழுந்த ராஜன் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் நில அளவை செய்து பொது இடத்தில் கம்பம்  நடலாம் என தெரிவித்துள்ளார். காவல்  ஆய்வாளர் தங்கநாடான் மற்றும் மின் துறை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொண்டதும் பொதுமக்கள் உட்பட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். ஆனால் அடுத்த 2  மணி நேரத்தில் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்த மின்துறையினர் காவல்துறையின் துணையுடன் கழிவு நீர் ஓடைக்குள் கம்பத்தை நட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் களியல் வட்டார செயலாளர் பி.சசி குமார் கூறுகையில், இன்ஸ்பெக்டர் தங்கநாடான் முன்னிலையில் மின்துறை அதிகாரிகள் வருவாய்துறையின் முடிவை மீறி ஓடையின் நடுவில் மின் கம்பம் நட்டனர்.

இதற்கான  காரணம் கண்டறியப்பட வேண்டும். மழைக்காலங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுக்க இந்த மின்கம்பம் காரணமாகும். எனவே, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலை வர் ராஜனின் தம்பி செல்வராஜ் என்ப வர் காவல் ஆய்வாளரிடம் தகவல்  கிடைத்தவுடன் நீங்கள் இடத்திற்கு வந்து  இருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டி ருக்காது என்று சொன்னபோது உதவி ஆய்வாளர் ஞானநேசனும் ஆய்வாளர் தங்க நாடாரும் நீ யாருடா  கேட்பதற்கு என்று சொல்லி பொதுமக்கள் மத்தியி லேயே கடுமையாக தாக்கினர். பொது மக்களையும் காவல்துறையினர் விரட்டி யடித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

;