மதுரை, செப்.6- செப்டம்பர் 15 அன்று நடைபெறவுள்ள மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட் டம் மதுரையில் செவ்வா யன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் தலைமை வகித்தார். இதில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, மாநிலப் பொருளாளர் மு.செந்தில் அதிபன், துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை முரு கன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரெக்கையா, சட்ட மன்ற உறுப்பினர்கள் சின் னப்பா, ரகுராமன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பி னர் மகபூப் ஜான், மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் எஸ்.முனியசாமி, புற நகர் வடக்கு மாவட்டச் செய லாளர் எம்.மார்நாடு, தெற்கு மாவட்டச் செயலாளர் எம். ஜெயராமன் மற்றும் மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை ஆகிய நான்கு மண்டலங்க ளைச் சேர்ந்த மாவட்டச் செய லாளர் கலந்து கொண்டனர். பின்னர் மதிமுக முதன் மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களி டம் கூறுகையில், ‘‘ஆயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தை வைத்து மனிதர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி சில இழிவான காரியங் களை விதைத்து வந்துள்ள னர். இதைத்தான் திராவிடம் எதிர்த்தது. அதனடிப்படையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் இதுபோன்ற கலாச்சா ரம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அவர் இந்துக்களுக் கும் எதிரி அல்ல; இந்து மதத் திற்கும் எதிரி அல்ல; ஆனால், அவர் ஏதோ இந்து மக்களை ஒழிக்க வேண்டும் என்று பேசியது போல் சித்த ரித்து தவறான பிம்பத்தை இந்துத்துவா கும்பல் உரு வாக்க முயற்சிக்கிறது. 2024 தேர்தலுக்காக இது போன்று குறுக்கு வழியை இந்துத்துவா கும்பல் கையாண்டு வருவதுபோல் தெரிகிறது. சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யும் இவர்களை நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள்’’ எனக் கூறினார்.