districts

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, டிச.18 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சாமியார் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், அவருக்கு  ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை  உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக் கத்தில்  ஸ்ரீசுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்பாபா. இவர் தன் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள்  எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த ஜூன் 16-ந்தேதி கைது செய்தனர். '

ஏற்கனவே, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து  அவரது ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தநிலையில் பாலியல் புகார் தொடர்பான ஒரு வழக்கில், ஜாமீன் கேட்டு  சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான கேளம் பாக்கத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளை தூண்டி விட்டு,  பொய் புகார்களை கொடுக்க வைத்துள்ள னர்’ என்று வாதிட்டார்.. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் , ‘சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டிருக்கி றது. நேற்று கூட ஒரு புகார் வந்துள்ளது. அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட் டுள்ளது’ என்று கூறி, மாணவிகளுடன் சிவசங்கர் பாபா இருக்கும் புகைப்படத்தை யும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், இந்த புகைப்படங்கள் ‘மார்பிங்’ செய்யப் பட்டவை, மனுதாரருக்கு 73 வயதாகி விட்டது என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘சாமியார் என கூறிக்கொள்ளும் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான புகார்கள் தீவிரமானதாக உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாக வாய்ப்பு  உள்ளது. அதனால், ஜாமீன் வழங்க முடியாது.  மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.