districts

மதுரை முக்கிய செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெரியாறு நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

தேனி, ஜூலை 7- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.5 அடியாக உயர்ந்துள்ளது . முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யான குமுளி, லோயர் கேம்ப், தேக்கடி உள்ளிட்ட பகுதிக ளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது . நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடி வரை உயர்ந்துள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழனன்று  116.90 அடியாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 118.05 அடியாக உயர்ந்துள்ளது.  நீர்வரத்து 2755 கன அடியாக இருந்தது.  அணையில் இருந்து 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. வரத்து 94 கனஅடி, திறப்பு 69 கன அடி, இருப்பு 1988 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாகவும் உள்ளது.  மழையளவு  பெரியாறு 27.4, தேக்கடி 25.2, கூடலூர் 3, உத்தம பாளையம் 2.6, சண்முகா நதி அணை 3.2, போடி 1.2, சோத்துப்பாறை 1, வீரபாண்டி 3, அரண்மனைபுதூர் 2.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

இன்று சிவகங்கையில்   பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை,ஜூலை 7- சிவகங்கை மாவட்ட முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூலை 8 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.  காலை 10 மணியளவில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/நகலட்டை கோரியும் கைப்பேசி எண் பதிவு/மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும்; தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட  வழங்கல் அலுவலகத்தில் மனுச் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரி வித்துள்ளார்.

கள்ளிமந்தையம் பகுதியில்  ஜூலை 10 இல் மின்சாரம் நிறுத்தம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 7-  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் ஜூலை 10 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.  இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் சுற்றுப்புற குக்கிராமங்களில்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, கள்னிமந்தையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரி வித்துள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக ரூ.51 லட்சம் பண மோசடி  சிவகாசியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது

விருதுநகர்,ஜூலை 7- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த  ரவிச் சந்திரன் என்பவருக்கு சொந்தமாக  5 ஏக்கர் நிலத்தை திருத் தங்கல்லில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வரும் ஈஸ்வரன்  என்பவருக்கு கிரயம் முடித்து பத்திரப்பதிவு செய்து தருவ தாக கூறினார். அவரிடம்  கடந்த ஜூன் மாதம் முதல் தவ ணையாக ரூ. 10 லட்சமும் அதனைத் தொடர்ந்து 2 ம் தவணை யாக ரூ. 41 லட்சமும் முன் பணமாக பெற்றுள்ளார். ஆனால் உறுதியளித்தபடி ,நிலத்தை வாங்கி தராமல், பத்திரப்பதிவு செய்யாமல், காலதாமதம் செய்ததாகவும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், ஜவுளிக்கடை அதிபர் ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி சத்யராஜ் மீது புகார் தெரிவித்தார்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் போலீ சார்  வெள்ளியன்று பாஜக நிர்வாகி சத்யராஜை கைது செய்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி னர். 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

இன்றைய நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் சார்பில் “ மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு முன்னேற் பாடு மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா “ சிறப்பு பேரவை. இடம்: செல்லூர் சோலை மஹால், மாலை 6 மணி. பங்கேற்பு மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எஸ். கண்ணன், இரா. விஜயராஜன், மா. கணேசன். 

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில்‌ மருத்துவப் பதிப்புகள் பயிற்சி பாசறை

தேனி, ஜூலை 7- தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சமூகம் சார்ந்த மருத்துவத்துறையின் சார்பாக மருத்துவ வெளியீடுகள் என்ற பெயரில் மருத்துவப் பதிப்புகள் பற்றிய பயிற்சி பாசறை நடைபெற்றது.  விழாவில் தலைமை தாக்கி கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், மருத்துவ வெளியீடு கள் பற்றிய இந்த பாசறை மருத்துவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது, முதுநிலை மருத்துவ மாணவர்களு க்கு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு மிகவும் உதவி கரமாக இருக்கும் .மேலை நாடுகளில் பிரபலமாக திகழ்கி ன்ற மாத இதழ்களிலும், தேசிய அளவில் குறியீடு பெற்ற இதழ்களிலும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் தான் அரசு விதிமுறைகளின் படி பேராசிரியராக பதவி உயர்வு கிட்டும் என்று குறிப்பிட்டார்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி கீ.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த இணை பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி மற்றும் பெரம்ப லூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ராக் பிரிட்டோ ஆகியோர் உரையாற்றினர். சமூகம் சார்ந்த மருத்துவத்துறை இணை பேராசிரியர் டாக்டர் ராம் பிரபாகர் வரவேற்றார். துணை பேராசிரியர் டாக்டர் சரண்யா நன்றி கூறினார்.  இந்த பயிற்சி பாசறையில் திண்டுக்கல், கன்னியா குமரி, மதுரை மற்றும் தேனி மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பயிற்சி மருத்து வர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இளம் பல்கலைக்கழக தரவரிசை: அழகப்பா பல்கலை., முதலிடம்

சிவகங்கை ஜூலை7- தமிழக அளவில் இளம் பல்கலைக்கழக தரவரிசை யில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் முதலி டம் பெற்றது. லன்டன் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2023 ஆம் ஆண்டுக்கான இளம் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை ஜூலை 3-ம் தேதி வெளியிட்டது. இதில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட இளம் கல்வி நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி 963 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு தரவுகள் அடிப்படையில் கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம், தொழில்துறை வருமானம் ஆகிய 5 பிரிவுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உலக அளவில் 101-150-வது இடத்தை பெற்றது. உயர் கல்வி  நிறுவனங்களில் இந்திய அளவில் 4-வது இடம், தமிழக அளவில் முதலிடம் பெற்றது. தரவுகளை சிறப்பாக சமர்ப்பித்த பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்களை துணைவேந்தர் க. ரவி பாராட்டினார். மேலும் ஏற்கனவே இப்பல்கலைக்கழகத்திற்கு  தேசிய தர நிர்ணய குழு (நாக்) ‘ஏ பிளஸ்’ அங்கீகா ரம் வழங்கியது. தேசிய மனித வளத்துறை தரிவரிசை யில் 30-வது இடம், உலக தரவரிசையில் உலக அளவில் 401-500-வது இடம், டைம்ஸ் நிறுவ தரவரிசையில் ஆசிய  அளவில் 111-வது இடம், கியு.எஸ். நிறுவன தரிவரிசையில் ஆசிய அளவில் 251-260-வது இடம், தெற்காசிய அளவில் 51-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியினர் மறியல் 

தேனி ,ஜூலை.7- ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு  மனு தள்ளுபடி செய்யப்பட்டு ,2ஆண்டு தண்டனை உறுதி செய்யப் பட்டது. ராகுல் காந்தி மீது பொய்வழக்கு போட்ட  பா.ஜ.க அரசினைக் கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் சித்தரேவு டோல்கேட் பேருந்து நிறுத்தம் பகுதியிலும், நத்தம் அருகே கோபால்பட்டியிலும் மறி யல் நடைபெற்றது. விருதுநகரில்  நகரத் தலைவர் நாகேந் திரன் தலைமையில் நடைபெற்றது. ராஜபாளையம் காந்தி சிலை முன்பு  மறியலில் ஈடுபட்டனர். 

;