மதுரை, அக்.20- அக்டோபர் 25 உலக உயரம் தடைப்பட்டோர் தினத்தை முன் னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வியாழனன்று மாவட்ட ஆட்சி யர்களிடம் மனு அளிக்கப்பட்டது. உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறி வித்து அரசின் அனைத்து திட்டங்க ளிலும் முன்னுரிமை வழங்க வேண் டும். கல்வி வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.மாதாந்திர உதவித் தொகை ரூ 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாவட்ட தலை நகரங்களில் சிறப்பு தங்கும் விடுதி கள் கட்டி பாதுகாத்திட வேண்டும். உயரம் குறைந்தவர்களை கேலி கிண்டல் செய்வதை தடுக்க மாநில அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச் சாரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றக்ககோரி ஆட்சி யர்களிடம் மனு கொடுக்கும் இயக் கம் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் பி.வீரமணி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஏ.பால முருகன், பொருளாளர் வி. மாரி யப்பன், காதுகேளாதோர் வாய் பேசாதோர் சங்க செயலாளர் சொர்ணவேல், மாவட்ட நிர்வாகி கள் ஏ. பாண்டி, டி. குமரவேல், தங்க வேல் மற்றும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.
இராமநாதபுரம்
உயர வளர்ச்சி தடைபட்ட வர்களின் நீண்ட நாள் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீசை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் நிலர் வேணி தலைமையில் மாவட்ட தலைவர் இராஜேஷ், மாவட்ட செய லாளர் இராஜ்குமார், மாவட்ட பொருளாளர் அரிகரசுதன், மாவட்ட துணை செயலாளர் நூர்முகம்மது மற்றும் கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.