சிவகங்கை, அக்.15- சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்து வக் கழகம் சார்பில் பசுமைத் திருவிழா காளையார்கோவி லில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பசுமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய இருதயராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவி ஜோஸ்பின் மேரி அருள்ராஜ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மரத்தினால் ஏற்படும் நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். 105 மரக்கன்றுகள் நடப்பட்டன. உடன் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சாரண ஆசிரி யர் ஆ.நாகராஜன் நன்றி கூறினார்.