சிவகங்கை, செப்.7- சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் தெம்மா பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் திருப்புத்தூர் தங்கமணி திரையரங்கு எதிரே உள்ள வீட்டில் குடியிருந்து வந்தார். இவர் கணவர் ராசேந்திரன் ஏற்கெ னவே இறந்துவிட்டார். மகன் அம்பேத்கர் பாரதி கோவை யில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் பட்டுக்கோட்டையில் வங்கியில் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில் புதனன்று காலை பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது ரத்த காயங்க ளோடு இறந்து கிடந்திருக்கிறார். உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் துறை கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்ம நாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். அவர் கையிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகைகள் 15 பவுன் வரைக்கும் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படு கிறது. ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகள் எடுக்கப் படவில்லை என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கி றார்கள்.