திண்டுக்கல், ஜுலை 11- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்றக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அம லாக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் அமு லாக்க வேண்டும். சாலைப்பணியாளர் களின் 41 மாத வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் ஆட்சியரகத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.முபாரக்அலி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் விவேகா னந்தன் விளக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் சு. மங்களப்பாண்டி யன் நிறைவுரையாற்றினார். துறைவாரி சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரித்துப் பேசினர். மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தலைவர் ஜெ. மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தோழமைச்சங்க மாநில. மாவட்ட நிர் வாகிகள் ஆதரித்துப் பேசினர். மாவட் டச்செயலாளர் க. நீதிராஜா விளக்கிப் பேசி னார். மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் நிறைவுரையாற்றினார், மாவட்டப் பொருளாளர் க. சந்திரபோஸ் நன்றி கூறி னார் ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். தேனி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேயத்தலைவர் தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் தாஜூதீன் கோரிக்கைகள் குறித்து விளக்கி னார். நிர்வாகிகள் பரமன், ராஜேந்திரன், முருகேசன், வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.