மதுரை வில்லாபுரத்தில் பெண்குழந்தை மர்மச்சாவு
மதுரை, ஆக.22- மதுரை மாவட்டம் வில்லாபுரம் அகஸ்தியர் தெரு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன்- கார்த்திகை ஜோதி தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 மாத பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஞாயிறன்று மர்மமான முறையில் 6 மாத பெண் குழந்தை அதிதி நாச்சியார் இறந்து விட்டதாக வும், இதனால் அருகில் உள்ள இடத்தில் திங்களன்று அதிகாலை பெற்றோர் குழந்தையை புதைத்துள்ளதாக கூறி காவல்துறையினருக்கு தகவல் வந்தது.இதன் அடிப்படையில், செவ்வாயன்று சம்பவ இடத்தில் அவனியாபுரம் காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி, ஆர். ஐ பிருந்தா, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெற்றோரிடம் கேட்டபோது, குழந்தை பிறந்த முதலே காய்ச்சல் மற்றும் இதயம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதற்காக சென்னை மதுரையை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் எந்த ஒரு பலனின்றி ஞாயிறன்று இறந்ததாகவும் இதனால் தான் குழந்தையை புதைத்த தாகவும் கூறப்படுகிறது.
தேனி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 38 பவுன் நகை கொள்ளை
தேனி, ஆக.22- தேனி அருகே அடுத்த அடுத்த வீடுகளில் 38 பவுன் நகை மற்றும் ரூ 1.10 லட்சம் கொள்ளை போனது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(63). இவர் தனது குடும்பத்து டன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜ பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. பீரோவில் பார்த்தபோது 31 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை யடிக்கப்பட்டது. இதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). இவர் வெல்லம் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அழகாபுரிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்கநகை, 350 கிராம் வெள்ளிபொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்தும் பழனிசெட்டிபட்டி காவல் நிலை யத்தில் இருவரும் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபு ணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி ஊழியரிடம் ரூ.12.60 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை, ஆக.22- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பாரதி தாசன் (55). கீழ்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் பாஸ்கரன் என்பவர் வீட்டில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஒத்திக்கு குடி யிருந்து வந்தார். இந்த நிலையில் பாரதிதாசனிடம் அந்த வீட்டை ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்கி கொள்ளுமாறு பாஸ்கரன் கூறினாராம். இதையடுத்து பாரதிதாசன் ரூ.10 லட்சத்தை பாஸ்கரனிடம் கொடுத்துள்ளார். பின்பு, வீட்டின் மூல பத்திர நகலை ஆய்வு செய்துள்ளார். அதில், அந்த வீடு, மதுரையை சேர்ந்த சிவப்பிரியா என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. எனவே, கொடுத்த பணத்தை பாஸ்கரனிடம் பாரதி தாசன் திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில், சிவபிரியா விடம் நேரடியாக பேசி வீட்டை ரூ.22 லட்சத்துக்கு பாஸ்க ரன் வாங்கியதோடு, பாஸ்கரன் ஒத்திப்பணம் உள்பட ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை திருப்பித் தரவில்லை. எனவே, பாரதிதாசன்அருப்புக் கோட்டை மாஜிஸ்தி ரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், அருப்புக்கோட்டை நகர போலீசார் பாஸ்கரன், அவரது தாயார் நாகலட்சுமி (72) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
போலி சான்று கொடுத்து வேலை மின் ஊழியர் மீது வழக்கு
தேனி, ஆக.22- சின்னமனூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போலி சான்று கொடுத்து பணி நியமனம் பெற்றதாக பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திர மோகன் என்பவர் சின்னமனூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் ,உதவி கணக்கு அலுவலராக பணி புரியும் சுந்தரி என்பவர் பணியில் சேரும் போது போலியான 10 ஆம் வகுப்பு சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததாக வந்த புகாரை விசாரணை செய்த போது போலியானது என தெரியவந்தது .எனவே சுந்தரி மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் அளித்திருந்தார் .அதன் பேரில் சுந்தரி மீது வழக்கு பதிவு செய்து சார்பு ஆய்வாளர் மாயன் விசாரணை நடத்தி வருகிறார்.
750 கிலோ வெங்காயத்தை திருடியவர்கள் கைது
சின்னாளப்பட்டி,ஆக.22- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உத்தையகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் முத்துராஜ் (54) மற்றும் ராமசாமி (66) ஆகிய இருவரும், தங்கள் தோட்டத்தில் பயிரிட்ட வெங்காயத்தை அறு வடை செய்து, விற்பனை செய்தது போக மீத முள்ள தரமான வெங்காயங்களை பிரித்தெ டுத்துஅடுத்த முறை பயன்படுத்த, விதைக் காக பட்டறையில் பாதுகாப்பாக வைத்தி ருந்தனர். இந்நிலையில் 50-கிலோ எடை கொண்ட, சுமார் 15 மூட்டை வெங்காயங் களை காமுபிள்ளைசத்திரத்தில் காளவாசல் நடத்திவரும், அழகம்பட்டியைச் சேர்ந்த செல்வம் (50) காமுபிள்ளைசத்திரத்தைச் சேர்ந்த பொன்ராம்(47) ஆகிய இருவரும் திருடி, செல்வம் என்பவருக்கு சொந்தமான, செங்கல் காளவாசலில் வைத்திருந்தனர். வெங்காயம் திருடிய தோட்டத்திலிருந்து, செங்கல் காளவாசல் வரை, வெங்காயத்தை வழி நெடுகிலும் சிதற விட்டு சென்றுள்ளனர். காலை தோட்டத்திற்கு சென்று பார்த்து விவ சாயிகள், வெங்காயம் சிதறி கிடந்த வழி யாக பின்தொடர்ந்து சென்று, காளவாசலில் பதுக்கி வைத்திருந்த வெங்காயத்தை கண்டு பிடித்தனர். அங்கு இருந்த வெங்காயத் திரு டன் காமுபிள்ளைசத்திரத்தைச் சேர்ந்த பொன்ராம் என்பவரை பிடித்து செம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், காளவாசல் உரிமையாளர் செல்வம் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையின ரிடம் 15 மூடை வெங்காயம் மற்றும் வெங்கா யம் திருட இருவரும் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசிடம் விவ சாயிகள் ஒப்படைத்தனர். இந்நிலையில், விவ சாயிகளே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வெங்காயத் திருடன் பொன்ராமை காவல்துறையினர் உடல்நிலை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் வெங்காய திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. இதையடுத்து செம்பட்டி காவல்துறை யினர் வெங்காய திருடர்களான காளவாசல் உரிமையாளர் செல்வம் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான காளவாசல் உரிமை யாளர் செல்வத்தை தேடி வருகின்றனர்.