மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் டி. நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் 56 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ். ஜான்சி ராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.