தூத்துக்குடி,டிச. 21 தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளி யில் வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலை மையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். வாகைக்குளம் சாமுவேல் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் மோசஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஊரக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருவைகுண்டம் ஒன்றியம் கொத்தலரிவிளை தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஞானதுரை கலந்து கொண்டார். மாணவ மாணவிகள் வாய்ப்பாடு ஒப்புவிக்கும் போட்டி ஆரம்பமானது. 2 ஆவது வாய்ப்பாடு முதல் 16 ஆம் வாய்ப்பாடு வரை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் 1 முதல் 16 வரை அதிவிரைவில் கூறவேண்டும். மிகக் குறைந்த நிமிடத்தில் ஒப்புவிக்கும் முதல் 3 மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவி ஹர்ஷினி 6 நிமிடங்கள் 33 நொடிகளில் ஒப்பு வித்து முதல் பரிசும், நான்காவது வகுப்பு படிக்கும் மாணவன் யூதா கேபா 7 நிமிடங்கள் 20 நொடி களில் ஒப்புவித்து இரண்டாம் பரிசும், 7 நிமிடங்கள் 42 நொடி களில் ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவி சந்தனமாரியும், மூன்றா வது வகுப்பு மாணவி சஞ்சனா தேவியும் ஒப்புவித்து மூன்றாவது பரிசை வென்றனர். போட்டி முடிந்தவுடன் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் நால்வருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு வாரியாக முதல் இரண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அணைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டது. பெற்றோர்களும், ஊர் மக்களும் கலந்துகொண்டு மாண வர்களைப் பாராட்டினர்.