districts

img

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மழையால் பல கிராமங்களில் மின்துண்டிப்பு

கடமலைக்குண்டு, ஆக்.13- தேனி மாவட்டம், வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகு திகளான வருசநாடு, வெள்ளி மலை, பொம்மராஜபுரம், இந்  திராநகர், மேகமலை உள்  ளிட்ட சுற்றுவட்டார வனப்பகு திகளில் புதன்கிழமை இரவு 3 மணிநேரத்திற்கும் மேலாக  மழை கொட்டித்தீர்த்தது. வனப்  பகுதிகளில் பெய்த கனமழை யால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர் வரத்து தொடங்கியது.  காட்டாற்று வெள்ள நீர் செந்நிறத்தில் நுரைபொங்க ஆற்றில் வந்ததை பொது மக்கள் மற்றும் விவசாயி கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். வைகை ஆற்றில் ஏற்பட்ட நீர்வரத்து மூலம் நிலத்தடிநீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. மேலும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடி நீர் உறைகிணறுகளில் இருந்து கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தால், தண்ணீரை காய்ச்சி பயன்படுத்தும்படி பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வா கங்கள் சார்பில் அறிவுறுத்  தப்பட்டுள்ளது. இதற்கி டையே புதனன்று இரவு  பெய்த பலத்த மழையின் கார ணமாக வருசநாடு, முருக் கோடை, சிங்கராஜபுரம், பண் டாரவூத்து, பூசிணியூத்து உளளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சார வினி யோகம் அடியோடு துண்  டிக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் பெரும் அவ திக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரிய பணியாளர்கள் துரிதமான சீரமைப்பு பணி களில் ஈடுபட்டதால் வியா ழக்கிழமை காலை10 மணிக்கு அனைத்து கிராமங்களுக் கும் மின்விநியோகம் வழங் கப்பட்டது.

;