districts

img

பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகள் பொருத்தம்

தேனி, பிப்.23- முல்லைப் பெரியாறு அணையில் நில நடுக்கத்தை அளவிடும் மற்றும் பாதிப்பு களை கண்டறியும் கருவிகளை ஹைதரா பாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வியாழ னன்று பொருத்தினர். நிலநடுக்கத்தினால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கேரளஅரசு தொடர்ந்து கூறிவந்தது. மேலும் இதுபோன்ற சூழ்நிலையைக் கண்கா ணிப்பதற்கும், அதிர்வுகளை பதிவு செய்வ தற்கும் உரிய கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் கண்காணிப்புக்குழுவை கேரளஅரசு வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கத்தை அளவிடும் மற்றும் பாதிப்புகளை கண்ட றியும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோ கிராப் ஆகிய கருவிகளை அணைப்பகுதி யில் பொருத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ 99.95 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட கருவிகள் நேற்று முன்தினம் பெரியாறு அணைக்கு கொண்டு செல்லப் பட்டன. நேற்று இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்றன. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒன்றிய அர சின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன், முதன்மை விஞ்ஞானி சேகர் தலைமையிலான குழுவினர் இக்கருவி களை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டனர். செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ராஜகோபால், கேரள நீர்ப்பாச னத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ்,  கேரள மின்வாரிய தொழில்நுட்ப நிபுணர்  ஜேம்ஸ்வில்சன், கட்டப்பனை கோட்ட செயற் பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆக்சலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதி மற்றும் சுரங்கப்பகுதியிலும், சீஸ்மோகிராப் அணையின் கேம்ப் பகுதி யிலும் பொருத்தப்பட்டன. இக்கருவிகளின் சமிக்ஞை செயற்கைக் கோள் மூலம் ஹைதராபாத் ஆராய்ச்சி நிலை யத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலநடுக்கத்தின் அளவு கள், நிலநடுக்கத்திற்குப்பின்பு அணைப்பகு தியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள தாக என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.