‘பிப்.3 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’
இராமநாதபுரம்,ஜன.31- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 30.012023 முதல் 01.02.2023 வரை காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் நிலை மிதமானது முதல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதையொட்டி, மீனவர்கள் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தென் தமிழக பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜன.31- உதவி இயக்குநர் நிலைக்கு பதவி உயர்வுகள் உடனடி யாக வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் நிலையில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பி விட வேண்டும். ஊராட்சி செயலருக்கு மறுக்கப்பட்டுள்ள தேர்வுநிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பாரத இயக்கம் வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
மதுரையில் ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தியவர் தற்கொலை விஷம் குடித்த தாயும் பலி
மதுரை, ஜன. 31- மதுரை முடக்குசாலை அருகில் நட்ராஜ் நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர்(46) . இவர் எஸ்எம்ஜே என்கிற ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வருகிறார். இவரின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரண மாக பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவது வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2ஆவது மனைவிக்கும் உமா சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் 2ஆவது மனைவி வீட்டை விட்டு சென்றுள்ளார் இதனையடுத்து உமாசங்கர் தனது தாய் விஜய லெட்சுமி (73) யுடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலை யில் உமா சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அவரது நண்பர்களும் செல்போனில் தொடர்புகொண்ட போது போன் எடுக்காத நிலையில் போன் ஆஃப் ஆகி யுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உமா சங்கரின் நண்பர்கள் இது குறித்து கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனையடுத்து கதவை உடைத்துசென்று அறையில் பார்த்தபோது உமா சங்கர் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகிய இரு வரும் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந் துள்ளனர். உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசார ணையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடன் ஏற்பட்டு அதனால் மனைவி யுடன் சண்டையிட்டதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கரி மேடு் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்வளத்துறை அலுவலகத்தில் 10 கண்மாய்களுக்கு மீன்பிடி ஏலம் முடிந்தது
தேனி, ஜன.31- வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் 10 கண்மாய்களுக்கான மீன்பிடி குத்தகை ஏலம் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற நிலையில் திங்களன்று முடி வடைந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலு வலகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் பல்வேறு கண்மாய்களில் மீன்பிடி குத்தகைக்கான ஏலம் நடை பெற்று வந்தது. இதில் பெரியகுளம் அருகே தாம ரைக்குளம், மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாய், வட கரை சின்னபூலாங்குளம், குள்ளப்புரம் சிறுகுளம், வட கரை கடம்பன்குளம், தென்கரை பாப்பையன்பட்டிகுளம், வடவீரநாயக்கன்பட்டி பூவளச்சேரி கண்மாய், கீழவட கரை பட்டத்திக்குளம், ஜெயமங்கலம் புதுக்குளம், வட கரை வேலங்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் மீன்பிடி குத்தகை ஏலம் நடைபெற்று முடிந்தது. இதில் செவ்வா யன்று ஜெயமங்கலம் புதுக்குளம், வடகரை வேலங்குளம் கண்மாயிகள் மீன்பிடி குத்தகை ஏலம் நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா தலைமை யில் ஏலம் நடைபெற்றது. ஜெயமங்கலம் புதுக்குளம் கண்மாய் மீன்பிடி ஏலத்தில் 74 நபர்கள் வங்கி வரை வோலை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். அரசு நிர்ணயத்தொகையாக 77ஆயிரம் நிர்ண யிக்கப்பட்டது. இதில் பெரியகுளம் அருகே சிந்து வம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவர் 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். வடகரை வேளங்கு ளம் கண்மாய் மீன்பிடி ஏலத்தில் 19 நபர்கள் வங்கி வரைவோலை செலுத்தி பங்கேற்றனர். அரசு நிர்ண யத்தொகையாக ரூ.55 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெரியகுளம் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி படுகொலை
அருப்புக்கோட்டை. ஜன.31- அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒரு வர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப் பட்டார். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தேங்காய் நந்தனம் தெருவை சேர்ந்தவர் முத்துமணி (43), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முத்துமணி திங்களன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால். வீடு திரும்பவில்லை. இதனால் அவ ரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் பாலையம்பட்டி, தூத்துக்குடி 4 வழிச்சாலை அருகே உள்ள தனியார் கிணற்றில் ஆண் உடல் கிடப்ப தாக தகவல் கிடைத்தது, இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். அந்த உடல் மாயமான கட்டிட தொழிலாளி முத்துமணி என்பது தெரியவந்தது. அதில்,கழுத்தில் கத்தியால் வெட்டிய காயம் இருந்தது. இதையடுத்து. அந்த உடலை போலீசார். கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஏஓ அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு
திருவில்லிபுத்தூர், பிப்.1- திருவில்லிபுத்தூர் சிவகாசி செல்லும் சாலையில் உள்ளது தைலா குளம் .இந்த ஊரில் கிராம நிர்வாக அலு வலகம் உள்ளது. அதில் செல்வராஜ் (வயது 52) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் கடந்த 25- 12 -2022 அன்று நள்ளி ரவு ஒரு மர்ம ஆசாமி பூட்டிய கதவில் மேலும் ஒரு பூட்டை போட்டுவிட்டு சென்றுவிட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இதில் கிராம நிர்வாக அலுவல கத்தை பூட்டியதாக அப்பைய நாயக்கன் பட்டி ஆலத் தூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பிப்.11 தேனி மாவட்ட நீதிமன்றங்களில் லோக் அதாலத்
தேனி,ஜன.31- தேனி மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளா கத்திலும் வரும் 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா தெரிவித்துள்ளார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வழக்கறிஞர் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னி லையில் வழக்குகள் நடைபெறும். மோட்டார் வாகன விபத்து இழப்பீடு குறித்த நிலுவை யில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், ஜீவனாம்சம், சமாதானம் செய்யக் கூடிய குற்றவழக்குகள் உள்ளிட்ட பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை இதன் மூலம் விரைவாகவும், சமாதானமாகவும் முடித்துக் கொள்ள லாம் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா தெரிவித்துள்ளார்.
குட்கா வைத்திருந்தவர் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்
ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன.31- தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ரூ.3.90 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர் பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மது ரைக்கிளையில் மனு தாக்கல் செய்தி ருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அரசு தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி -மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த உத்தர விட்டு மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தின மும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திடவும். மனுதாரர் தலை மறைவாகவோ வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை கலைக்கவும் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.