திண்டுக்கல், ஜுலை 10- கடுமையான விலை வீழ்ச்சியை யொட்டி கிலோ ரூ.140 க்கு கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொப் பரை தேங்காய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதையடுத்து கிலோ ரூ. 140 க்கு கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஏக்கருக்கு 900 கிலோ கொள்முதல் செய்ய வேண் டும். ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு கொப்பரை தேங்காய் 290 கிலோவிலி ருந்து 900 கிலோவாக உயர்த்த வேண் டும். திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். உரம், பூச்சி மருந்து, இயந்திரங்கள் முழுமானி யத்துடன் வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை அரசே கொள் முதல் செய்து ரேசன் கடை மூலமாக விநி யோகிக்க வேண்டும். தேங்காய் எண் ணெய்க்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. பிச்சைமணி தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கருணாகரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பி.ராஜேந் திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ராமசாமி, மாவட்டத் தலைவர் பெருமாள், பொரு ளாளர் தயாளன் உள்ளிட்ட பலர் ஆட்சி யர் அலுவலகம் முன்பு தேங்காய்களை தரையில் உடைத்து போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டதில் உடைத்த தேங்காய்களை பெண்கள் எடுத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்த மக்களுக்கு விவசாயிகள் தேங்காய் களை இலவசமாக கொடுத்தனர்.