மதுரை, டிச.6- வேளாண் சட்டங்களை ரத்து செய்திட கோரி ஓராண்டுக்கு மேலாக போராடி கொண்டி வரும் விவசாயிகளை சிறுமைப்படுத்தி டிசம்பர் 1 ஆம் தேதி அன்று அட்டை படத்தில் கார்ட்டூனில் சித்தரித்த துக்ளக் இதழ் மற்றும் ஆசிரியரை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மதுரை மாவட்டக் குழு சார்பில் திருமங்கலத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னணி யின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ஜி.சந்தானம் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், தாலுகாச் செயலாளர் ராசுஅய்யர், தமிழ் தேச முன்னணி மீ.தா.பாண்டி யன், மக்கள் அதிகாரம் குருசாமி, சிபிஐ ஜெயகொடி மற்றும் பல விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.