districts

img

வரத்துக் கால்வாய் உடைந்ததால் நீரின்றி வறண்ட கம்மிகுளம் கண்மாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

இராஜபாளையம், டிச.11- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே புத்தூர் பகுதி யில் கம்மி குளம் கண்மாய் உள்ளது. இதன் வரத்துக் கால்வாய் உடைந் ததை சரி செய்யாததால் கண் மாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உட னடியாக இதை சரி செய்து கொடுக் குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராஜபாளையம் அருகே புத்தூர் கிராமப் பகுதியில் கம்மி குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பாசனத்தில் 100 ஏக்க ருக்கும் மேலாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது கம்மிகுளம் கண்மாய்க்கு தேவி யாற்றில் இருந்து தண்ணீர் வந்து புலவர் குளம் பிரிவில் தண்ணீர் வராத நிலையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  இதன் காரணமாக வேறு கண் மாய்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது. புலவர் குளம் பிரிவில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டாட்சியர் அலு வலகங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும் சரி செய்யப்படவில்லை.  தற்போது கம்மிகுளம் கால்வாய் வறண்டு காணப்படு கிறது. குளத்திலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. வரத்துக் கால்வாய்கள் பல ஆண்டு காலமாக சரி செய் யப்படாததால் தண்ணீர் வந்தாலும் தேங்கி நிற்பதற்கு கூடிய வழி முறைகள் இல்லை.  எனவே விவசாயிகள் நல னைக் கவனத்தில் கொண்டு உட னடியாக சீர்செய்து கம்பி குளம் கண்மாய் பாசன விவசாயிகளை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத் துள்ளனர்.

;