திருநெல்வேலி, டிச. 8- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்க ளில் மட்டும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டர் மழை பெய்தது.கருப்பாநதி அணைப் பகுதியில் 16 மில்லி மீட்டரும், சேரன்மகா தேவியில் 13.4 மில்லிமீட்டரும், எட்டய புரத்தில் 6.1 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 1.4 மில்லிமீட்டர் மழை யும் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் காற்று வீசியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்தாலும், அணைக ளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாப நாசம் அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 1,390 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 987 கனஅடி திறந்து விடப்படு கிறது. அணை நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.90 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இத னால் 118 அடி உயரம் உள்ள மணி முத்தாறு அணை நிரம்பி 117.60 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து செவ்வா யன்று 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. ஆனால் புதனன்று விநாடிக்கு 305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணை ஓடை யில் கூடுதலாக தண்ணீர் சென்று தாமிர பரணி ஆற்றில் கலக்கிறது. தற்போது தாமிர பரணி ஆற்றில் நெல்லை பகுதியில் விநாடிக்கு 8,132 கனஅடி தண்ணீர் செல்கி றது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 10,605 கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.