districts

மதுரை முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனையில்  ஊழியர் வாகனம் திருட்டு

இராமநாதபுரம்,செப்.25- இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில்  செவிலியர்கள்  உதவியாளராக பணியாற்றி வருபவர் முகேஸ் கண்ணன் (58). இவர் 14 ஆம் தேதி இரவு பணிக்கு  வந்தவர் வாகனம் நிறுத்துமிடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். காலையில் மீண்டும் வாகனத்தை எடுக்க சென்ற போது வாகனம் அந்த இடத்தில் இல்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் இரு சக்கர வாகனம் கிடைக்க வில்லை. இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் தேனி ஆட்சியர் பெயரில்  போலி வாட்ஸ் -ஆப் கணக்கு 

தேனி, செப்.25- தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் மீண்டும் போலி  வாட்ஸ் -ஆப் கணக்கு துவங்கி மர்ம நபர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பேரில் மர்ம நபர்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்-  ஆப் கணக்கு தொடங்கினார். அதில் ஆட்சியரின்  பெயர்,  புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலு வலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறுஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.  இந்த தகவல் ஆட்சியர்  முரளிதரனுக்கு கிடைத்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்  டோங்கரே விடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில்  தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். மீண்டும் மற்றொரு எண்ணில்  போலியான வாட்ஸ்-ஆப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க  முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் மேலும்  ஒரு மர்ம நபர் போலி யான வாட்ஸ்-ஆப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மணல் கொள்ளையை தடுக்கக்கோரி  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், செப்.25- இராஜபாளையம் மேற்கு தேவதானத்தில் பெரிய கண்மாயில் அரசு விதிமுறையை மீறி 30 அடி ஆழத்தில்  மணல் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மணல் கொள்ளையை உடனே தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேவதானத்தில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி வனராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.முருகன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆ. குருசாமி ஆகியோர்  பேசினர்.

4 வழிச்சாலை தடுப்புச் சுவரில்  கார் மோதி  தாய், மகன் பலி

விருதுநகர், செப்.25- விருதுநகர் அருகே நான்கு வழிச் சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (56). இவரது மனைவி முத்துலட்சுமி (55).  இவர்களது மகன் மௌலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வாடகை காரில் புறப்பட்டு சென்ற னர். காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டியுள்ளார். விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே சென்ற போது,  கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே  உள்ள  தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, அவரது மகன் மௌலி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த னர். மேலும் கண்ணன், கார் ஓட்டுநர்  குணசேகரன் ஆகி யோர் படுகாயமடைந்தனர்.   இவர்களை, அவ்வழியே வாகனங்களில் சென்ற வர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்  சைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து  வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

சாத்தூர், செப்.25- சாத்தூரில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற வரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் சிவன் கோவில் கீழரதவீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(49). இவர் தனது இரு சக்கர வாகனத்தை  தெப்பக்குளம் அருகே  நிறுத்தி விட்டு  தனது மனைவி யுடன் காய்கறி வாங்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவரது வண்டியின் கைப்பிடிப் பூட்டை ஒருவர் உடைத்துக் கொண்டிருந்தாராம். அருகில்  வந்த போது, வேறு சாவியைப் போட்டு வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார். இதையடுத்து, ராஜ்குமாரும், அவரது மனைவியும் அபயக்குரல் எழுப்பி னர்.  இதையடுத்து, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் வண்டியை ஓட்டிச் சென்ற மர்ம நபரை  மடக்கிப் பிடித்தனர். பின்பு, அவரிடம் நடத்திய விசாரணை யில் வண்டியை திருடிச் சென்றது சடையம்பட்டியைச் சேர்ந்த மகாராஜா(25) என்பது தெரிய வந்தது. இதைய டுத்து, அந்த நபரை சாத்தூர் நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரையில் தாக்கி வீசப்பட்ட முதியவர் மீட்பு 

இராமேசுவரம்,செப்.25-  இராமநாதபுரம் வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த வர் மகாலிங்கம் (70). இவர் மண்டபத்தில் உணவு விடுதி யில் வேலை செய்து வருகிறார்.  மண்டபத்தில் உள்ள உறவினர் ராஜேஸ்கண்ணன்(31) இவரது வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி வழக்கமாக வேலைக்கு சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை.  இந்நிலையில் 24 ஆம் தேதி காலையில் தெற்கு  கடற்கரை பகுதியில் ஆடையின்றி உடல் முழுவதிலும் வெட்டு காயத்துடன் கிடப்பதாக மீனவர்கள் தகவல் தெரி வித்தனர். இதனைதொடந்து முதியவர் மீட்கப்பட்டு ராம நாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில்  ராஜேஸ் கண்ணன் அளித்த புகாரை தொடர்ந்து சனிக்கிழமை வழக்கு பதிவு  செய்து முதியவரை தாக்கியவர்கள் குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் ஊற்றியபோது தீப்பிடித்து ஒருவர் பலி

கடமலைக்குண்டு, செப்.25- தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப் பாறையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 38). இவ ருக்கு பிரபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ள னர். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மீண்டும் தனது  வீட்டுக்கு செல்ல முயன்ற போது பைக்கில் பெட்ரோல் இல்லை. இதனைத் தொடர்ந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றினார். அப்போது திடீரென அவரது உடம்பில் தீ பிடித்து எரியத் தொடங்கியது.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பலத்த காயங்களுடன் ஆம்பு லன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப் பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

2 பேர் நீரில் மூழ்கி பலி 

திருநெல்வேலி, செப்.25- நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த வர் இசக்கிராஜ் (59). இவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு, முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். சம்பவத்தன்று ஆற்றில் குளிக்க மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். வெகுநேரமாகியும் அவர் வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உற வினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கரையில் அவரது  மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது. விரைந்து தேடிய போது இசக்கிராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு  ஆட்சியர் பாராட்டு

இராமநாதபுரம், செப்.25- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்  நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் போட்டித்தேர்வு கான நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்று போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்  தலைமையேற்று அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 5 நபர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார்.   பின்னர் ஆட்சியர் பேசுகையில், இப்பயிற்சி மையத்தின்மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று 260-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அர சின் பல்வேறு துறைகளில் தற்போது பணியாற்றி வரு கின்றனர். பரமக்குடியில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 3 பேர் இறுதி தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் யமுனா என்பவர் ஆங்கில பாடத்தில் மாநில அளவில் 5-வது இடம் பிடித்து தேர்வு  பெற்றுள்ளார். இப்பயிற்சி வகுப்புகளை நடத்திய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டுவதுடன் மேலும் அதிக அளவில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் (பொ) செ.மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ.) த.அருண்நேரு ஆகியோர் பங்கேற்றனர்.

செப்.28,29 போடியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நகராட்சி ஆணையர் அறிவிப்பு 

தேனி, செப்.25- போடி நகராட்சி பகுதியில் வருகிற செப்டம்பர் 28,29 ஆகிய இரு தினங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று நகராட்சி ஆணையர் தி.செல்வராணி  தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் குரங்கணி கொட்டகுடி ஆற்று ஆப்டேக்கில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மெயின் குழாய் பொருத்தும் பணி செய்ய வேண்டியுள்ளதால் வரும் செப்டம்பர் 28,29  ஆகிய இரு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாத சூழல் உள்ளதால் ,பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று 


 

;