தேனி, ஜூலை 13- புதிய காப்பீடு திட்ட குறைபாடுகளை களைந்து, உடனடியாக மருத்துவ செலவினை உரியவருக்கு வழங்க வேண்டும் என மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் தேனி மாவட்ட 18 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் போடியில் மாவட்ட தலைவர் வி. பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் வி.ராஜு சங்க கொடியை ஏற்றி வைத் தார். எம்.பாலசுப்ரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கே.துரைராஜ் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் கே. சந்திரசேகரன் ,வரவு செலவு அறிக்கையை பொரு ளாளர் எம்.அமிர்தவேல் பாண்டியன் ஆகியோர் சமர்ப்பித்தனர் .பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க தலை வர் சவுக்கத் அலி வாழ்த்திப் பேசினார் . புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக வி.பெருமாள்சாமி, செயலாள ராக பி.மாரிச்சாமி, பொருளாளராக எம்.அமிர்த வேல்பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மின் வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். மின்வாரிய வைர விழா வெகுமதி 3 சத வீதம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.