districts

img

புதிய பென்சன் திட்டம் ரத்து கோரி மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.12- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என வலியுறுத்தி நாகர்கோவி லில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆண்கள் மேலாடையின்றியும் பெண்கள் வாயில் கறுப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  மத்திய அரசு அறிவித்த அக விலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், காசு இல்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை மின் வாரியம் ஏற்று நடத்த வேண்டும், முடக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், விதவை, விவாகரத்தானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதி யத்தை வழங்கிட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.ஞானா சீர்வாதம் தலைமை வகித்தார். மேலும் சங்க மாநிலச் செயலாளர் வி.ஜெயராமன், மாநில உதவித் தலைவர் கே.அன்னதீபம், மாவட்ட பொருளாளர் கே.குஞ்சன் பிள்ளை, மாவட்ட செயலாளர் ஆர். பிரான்சிஸ், மாவட்ட இணைச்செய லாளர்கள் ஆர். குமரேசன், எம். சிவதாணு, பாக்கியசந்திரா, வி.எஸ்.குமார், வி.குமரேசன், டி. வனஜா  மாவட்ட உதவித் தலைவர் கே.ராமசந்திரன், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செய லாளர் பி.குணசேகரன் உள்ளிட் டோர் பேசினர். நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.