districts

img

மின்வாரியத்தை தனியாருக்கு விற்பதா? மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,  டிச. 8 - மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. மின்சார சட்ட திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டால், மாநில மின்  வாரியங்கள் துண்டு துண்டு களாக உடைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இத னால் மின் கட்டணம் கடுமை யாக உயர்வதோடு, தற்போது விவசாயிகள் பம்பு செட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கா மல் போகும்.  மேலும் மின் துறையில் மாநில அரசாங்கம் எந்த தலையீடும் செய்ய முடி யாது. ஒன்றிய அரசே மின்து றையை நடத்தும். எனவே  இந்த மின்சார சட்டத்திருத்த  மசோதாவை நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யாமல் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய மின் ஊழியர்  கூட்டமைப்பு அறைகூவ லின்படி புதனன்று நாடு முழு வதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி தென்னூரில் உள்ள  மின்வாரிய தலைமை பொறி யாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொமுச திட்ட செயலாளர் தியாகராஜன், ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், மாநில துணை பொது செய லாளர் இருதயராஜ், எம்பி ளாய்ஸ் பெடரேஷன் திட்ட செயலாளர் சிவசெல்வன், இன்ஜினியர் சங்க செய லாளர் ராஜேஷ், பொறியாளர்  விக்ரமன் ஆகியோர் பேசி னர். முடிவில் தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வ ராஜ் நன்றி கூறினார்.