நாகர்கோவில், பிப்.14- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஒன்பது வார்டுகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.உசேன், மாவட்ட குழு உறுப்பினர்களும் சிபிஎம் வேட்பாளர்களுமான கே. மோகன் (8 வார்டு), எஸ். அந்தோணி (9 வார்டு) மற்றும் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவம் ஆகியோருடன் கலந்துரையாடினர். குழித்துறை நகராட்சி தேர்தல் பணி குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. வி பெல்லார்மின், மாவட்ட செயலாளர் ஆர். செல்ல சுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், வட்டார செயலாளர். மோகன் குமார் மற்றும் போட்டியிடும் அனைத்து வார்டு வேட்பாளர்களும் பங்கேற்றனர். கொல்லங்கோடில் நடந்த கலந்தரையாடலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், வட்டார செயலாளர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.