மதுரை, ஜூலை 27- மதுரை மூட்டா அரங்கத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் தேர்தல் மூட்டா விஜயகுமார் மற்றும் மனோகரன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக செயல்பட்டு புதனன்று நடத்தினர். மாநில தேர்தலில் போட்டியின்றி அனைத்து நிர்வாகி களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக முரளி தரன், மாநில பொதுச் செயலாளராக பர்வதராசன், மாநில பொருளாளராக கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக கப்பட்டனர். மாநிலத் துணை பொதுச் செயலாளராக மனோகர ஜஸ்டஸ், மாநிலத் துணைத் தலைவர்களாக நிலவு குப்புசாமி, தியாகராசன், பாலசுப்பிரமணியன், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.