districts

போதைப் பொருள் கடத்தி வந்த டிரோன் சுட்டு விரட்டியடிப்பு

புதுதில்லி,டிச.2- இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தி வந்த டரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு விரட்டியடித்தனர். நவம்பர் 30 இரவிலும் டிசம்பர் 1 அதிகாலையிலும் பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு ட்ரோன் விமானம் அமிர்தசரஸை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தது. இதையறிந்த எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் ட்ரோன் மீது சரமாரியாக துப்பாக்கிச்  சூடு நடத்தி, விரட்டியடிக்கப்பட்டது.ட்ரோனில் இருந்து வீசப்பட்ட நான்கு பொட்டலம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.