திண்டுக்கல், செப்.20- மின் கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சின்னாளபட்டி சுங்குடிச் சேலை உற்பத்தி திக்குமுக்காடுகிறது. ரூ.200க்கு விற்ற சேலை ரூ.400க்கும், ரூ.500க்கு விற்ற சேலை ரூ.1000க்கும் என இரு மடங்கு விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் கொள் முதல் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள் என வியாபாரி கள் கவலையுடன் கூறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது சுங்குடிச்சேலை கள் தான். இந்த சுங்குடி சேலைகள் உலகப் புகழ் பெற்ற காட்டன் சேலைகள் ஆகும். இந்த சேலைக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இந்த சேலைகள் ரூ.150லிருந்து ரூ.400 வரை மிகக்குறைந்த விலைக்கு விற்கப் பட்டு வருகிறது. இதை உடுத்துவதால் உடலுக்கு நல்லது என்பதால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள். இங்கிருந்துதான் கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஓணம் திருவிழாவிற்கும் வியாபாரிகள் வந்து கொள் முதல் செய்கிறார்கள். அதே போல் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளி நாடுக ளுக்கும் இங்கு தயாரிக்கப்படும் சுங்குடிச் சேலைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நூல் விலை இறக்கம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இல்லை. மின்சாரக் கட்டண உயர்வு இல்லை. இதனால் மூலப்பொருட்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த தொழிலை நம்பி சின்னாளபட்டியில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் அயர்னிங், பிரிண்டிங், சாயமேற்றுதல், டை போடுதல் உள்ளிட்ட தொழில்களை செய்து வாழ்ந்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு போட்ட ஜி.எஸ்.டி வரியின் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொழில் கொரோனா காலங்களில் மேலும் பாதிப்புக்குள்ளாகியது. கொரோனா காலங்க ளில் தீபாவளி, பொங்கல், ஓணம், ரம்ஜான், கிறிஸ்து மஸ் உள்ளுர் திருவிழாக்கள் என எந்த சுபநிகழ்ச்சிக ளும் இல்லாத காரணத்தால் இத்தொழில் மேலும் நலி வடைந்து அழிவின் விளிம்பில் இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு தளர்வுகள் முற்றிலும் அகற்றப்பட்டு விசேஷ வைபவங்கள், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிற சூழலில் ஆண்டு தோறும் ஒரு மாதத்திற்கு முன் பாகவே தீபாவளியை முன்னிட்டு ஆர்டர்கள் கிடைக்கும்.
அதிகமான உற்பத்தி செய்யப்படும் என்று எண்ணி யிருந்த நிலையில் விலை நிர்ணயம் இல்லாமல் நூல் விலையேற்றம், மின்சாரக் கட்டணம் உயர்வு காரணமாக உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு என்ன விலை நிர்ணயிப்பது என்று தெரியாத காரணத்தால் வியாபாரி கள், உற்பத்தியாளர்கள், ஆர்டர் கிடைக்காத காரணத் தால் விரக்தியடைந்துள்ளனர். இதனால் தீபாவளிக்கு ஒரு மாத காலம் இருக்கும் முன்பே இரவு பகலாக சேலை செய்யும் தொழில் தற்பொழுது இரண்டு மணி நேரமோ, 3 மணிநேரமோ தான் வேலை கிடைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழி லாளர்கள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நூல் விலையேற்றம், மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் கடந்த ஆண்டு ரூ.200க்கு விற்ற சுங்குடிச்சேலை தற்போது ரூ.400க்கும், 300க்கு விற்ற சேலை ரூ.600க்கும், ரூ.500 விற்ற சேலைகள் ரூ.1000க்கும் என இருமடங்கு விலை ஏறி யுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் சேலைகள் வாங்கும் விருப்பம் குறைந்து குறைவான கொள்முதல் செய்கிற நிலை உள்ளது. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலமு, திண்டுக்கல்