மதுரை, செப்.21- மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ அவர்களின் 56 ஆண்டுகால அரசியல் பய ணத்தை போற்றும் வகை யில் தலைமை கழக பொதுச் செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான மாமனிதன் வைகோ “தி ரீயல் ஹீரோ” வரலாற்று ஆவணத் திரைப்படம் அண்ணாநகர் சினிப்பிரியா திரையரங்கில் புதனன்று காலை திரையிடப் பட்டது. இந்த ஆவணப் படத்தின் கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் துரை வைகோ மற்றும் சட்டமன்ற உறுப்பி னர் மு.பூமிநாதன், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பி னர் மகபூப்ஜான், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர் வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப் படத்தை பார்த்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலா ளர் கே. ராஜேந்திரன் ஆகி யோர் திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து விட்டு துரை வைகோவுக்கு சால்வை அணிவித்து வாழ்த் தினர்.