districts

img

என்.புதுப்பட்டி சிபிஎம் பொதுக்கூட்டத்தில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

சின்னாளப்பட்டி, ஜுலை 5- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் செவ்  வாய்க்கிழமையன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கட்சி யின் நிலக்கோட்டை ஒன்றி யச்செயலாளர் எம்.செந்தில்  குமார் தலைமை வகித்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றியக்குழு சார்பாக 15 தீக்க திர் சந்தாக்களும் வத்தலக்குண்டு  ஒன்றியக்குழு சார்பாக 9 சந்தாக் களும் என மொத்தம் 24 சந்தாக்கள் வழங்கப்பட்டன. நிலக்கோட்டை ஒன்றியச்செயலாளர் எம்.செந் தில்குமார், வத்தலகுண்டு ஒன்றி யச்செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகத்திடம் சந்தா தொகைகளை வழங்கினர். இதில்  மாவட்டச்செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ராணி. எம்.ராமசாமி,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ஆஸாத், எஸ்.ஆர்.சௌந்திர ராஜன், கே.ஆர்.பாலாஜி, ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.காளியப்பன், என்.புதுப்  பட்டி கிளை செயலாளர்கள் குரு சாமி, ராஜு, சேவுகப்பெருமாள், மாலா ஆகியோர் பேசினர். (நநி)