districts

img

கல்வியின் அவசியம் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல்

தூத்துக்குடி, டிச.19 கல்வியின் அவசியம் குறித்து வேம்பார் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஜி வி மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்துரை யாடினார். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் தெற்கு ஊராட்சி புனித பீற்றர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவி களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்கண் டேயன்  கல்வியின் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.   முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை.எழிலரசி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து கோவில் பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், வேம்பார்  தெற்கு ஊராட்சி மன்றதலைவர் ஆரோக்கியராஜ் ,வேம்பார்  ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி , ஒன்றிய கவுன்சிலர்  செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.