districts

மாற்றுத்திறனாளிகள்: முதல்வரிடம் வாழ்த்து

சென்னை,டிச.8- மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்தி றனாளிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சர்வதேச மாற்றுத்தி றனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று தில்லியில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடை பெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், சிறந்த சான்றாளர் மற்றும் முன்னுதாரண பொன்ற விருதுகளை குடியரசுத் தலைவரிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளும் புதன்கிழமை(டிச.8) முதல்வர் ஸ்டா லினை தலைமைச் செயலகத்தில், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;