துணை மேயர் டி. நாகராஜன் மீது அவதூறு பரப்பி பொய் பிச்சாரம் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பணிகள் குறித்தும் அரசியல் விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது . மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன்,பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.